Advertisment

கேரளாவில் ரெட் அலெர்ட்! நீலகிரியை வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவ மழை.

Chennai weather today:நேற்று மாலை பொழுதிகளில் நகரங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து பலரையும் மகிழிச்சி கொள்ள வைத்தது சென்னை வானிலை .

author-image
WebDesk
Aug 06, 2019 08:14 IST
Weather Chennai News, Weather Today, Weather Tamil Nadu, Weather Tamil Nadu News இன்றைய வானிலை அறிவிப்பு

Weather Chennai News, Weather Today, Weather Tamil Nadu, Weather Tamil Nadu News இன்றைய வானிலை அறிவிப்பு

Tamilnadu weather latest updates:  கேரளாவில் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று கடுமையான மழையால் கேரளாவில் உள்ள 3 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தமிழகத்திலும், நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோயம்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் கனத்த மழை பதிவானது.

இன்றும், நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அம்மாவட்டத்திலுள்ள பந்தலூர், கூடலூர், குந்தா, ஊட்டி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை வானிலை 

 

மழை எச்சரிக்கை

நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் 21 cm மேல் நேற்று மற்றும் மழை பதிவாகியுள்ளதை அடுத்து, இன்றும் அம்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

publive-image

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

நேற்று மாலை பொழுதிகளில் நகரங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து பலரையும் மகிழிச்சி கொள்ள வைத்தது சென்னை வானிலை .

ஆனால், நேற்றை விட இன்று ஒப்பிட்டு ஈரப்பதம்(relative Humidity ) காலை நிலவரப் படி சற்று கம்மியாய் இருப்பதால் நேற்றை விட மழையின் அழுத்தம் சற்று கம்மியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. பொதுவாக,ஒப்பிட்டு ஈரப்பதம் அதிகம் இருந்தால் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்பது அறிவியல் கருத்து.

publive-image

 

#Rain In Tamilnadu #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment