Chennai weather today southwest monsoon latest updates weathermen reports : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் : கர்நாடகாவிற்கு உத்தரவு
Tamil Nadu weatherman Report
காஞ்சி, திருவள்ளூர், மற்றும் சென்னை பெல்ட்டுகளில் ஆகஸ்ட் 1 முதல் 10 தேதி வரையில் மழைக்கு வாய்ப்புகள் குறைவு என்று தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் அறிவித்துள்ளார். மும்பையில் இன்று துவங்கி திங்கள் கிழமை காலை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore weatherman report
அரபிக்கடலோர மாநிலங்களில் வருகின்ற வாரத்தில் மிதமான மழை துவங்கி கனமழை பெய்யக்கூடும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரின் அறிக்கை படி 4 முதல் 6 தேதிகளில் மிதமான மழை அரபிக் கடலோர மாநிலங்களில் பெய்யக்கூடும். பின்பு அதன் வேகம் அதிகரித்து 7ம் தேதி துவங்கி 11 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளார்.
கொங்கன் பகுதிகளில் நான்காம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் கர்நாடக கடற்கரை மாவட்டங்களில் 5-ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான வயநாடு, குடகு, தலைக்காவேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று அவர் அறிவித்துள்ளார்.