scorecardresearch

Tamil Nadu weather latest updates: கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Chennai weather today: சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

chennai weather today
Tamil Nadu Weather

Chennai weather latest updates: சமீப நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 8.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை வானிலை

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai weather today southwest monsoon latest updates