Chennai weather today Tamil Nadu, Puducherry will get moderate rain : தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று அதிகமான மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தர்மபுரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நாகையின் மயிலாடுதுறையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மங்கலாபுரம் (நாமக்கல்), கீரனூர் (புதுக்கோட்டை), அரியலூர், ஏற்காடு, ராசிபுரம், வாழப்பாடி, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை), மாயனூர் (கரூர்) ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இவை தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது.
மேலும் படிக்க : சென்னை வானிலை : இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
பவானி சாகர் அணை நிலவரம்
அணையின் நீர்மட்டம் 96.04 அடி
நீர் இருப்பு - 25.7 டி.எம்.சி
நீர்வரத்து 2,753 கன அடி
வெளியேற்றம் 2,600