Advertisment

இன்றைய வானிலை : திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu weather rain in tamilnadu chennai weather, Chennai weather today Tamil Nadu southwest monsoon latest updates

tamilnadu weather rain in tamilnadu chennai weather

Chennai weather today Tamil Nadu southwest monsoon latest updates : இன்றைய வானிலை தமிழகத்தில் என்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை நமக்கு அறிவித்துள்ளது.

Advertisment

நேற்று கனமழை பெய்த இடங்கள்

நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி,  கடலூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுவையின் காரைக்காலிலும் நல்ல மழை பெய்துள்ளது.

இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு இடத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவானது. திருத்தணியில் 6 சென்டி மீட்டர் மழையும், குடியாத்தத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் நேற்று பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உண்டு.   அதிகபட்ச வெப்ப நிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.  குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

மேலும் படிக்க : இன்றைய வானிலை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Chennai Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment