Chennai weather today Tamil Nadu weatherman latest update Break monsoon : யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு அப்டேட் கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார் சென்னை வெதர்மென் ப்ரதீப் ஜான். அவர் நேற்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூலை 9ம் தேதி முதல் Break Monsoon காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டப்போவதாக குறிப்பிட்டிருக்கிறார். சென்னை மற்றும் வட தமிழகத்தில் 2017ம் ஆண்டு இது போன்று பெய்த கனமழை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவர்.
தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகம் முழுவதும் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்ற இந்நிலையில், ப்ரதீப் ஜானின் அப்டேட் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. அடுத்த வாரம் உத்திரப்பிரதேசம், பிகார், மற்றும் மேற்கு வங்கம், டார்ஜ்லிங் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வானிலை அறிக்கையின் படி நேற்று அதிக மழைப் பொழிவினை பெற்ற இடங்கள்
தேவலா (நீலகிரி) 6 செ.மீ மழை
மெய்ன் பஜார் (நீலகிரி) 5 செ.மீ மழை
பெரியார் (தேனி), மேல் பவானி (நீலகிரி) 4 செ.மீ மழை
அவலாஞ்சி (நீலகிரி) 3 செ.மீ
நடுவட்டம்(நீலகிரி), வால்பாறை(கோவை) 2 செ.மீ மழை
சின்னக்கல்லாறு (கோவை), பாப்பநாசம் (திருநெல்வேலி) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மழை பதிவாகும்.
மேலும் படிக்க : இரண்டு நாட்களாக நீலகிரியை புரட்டி எடுத்த பருவமழை