Advertisment

இன்னும் எத்தனை நாட்கள் சென்னையில் மழை பெய்யும். வெதர்மேன் சூப்பர் அப்டேட்.

chennai weather today : வெளுத்து வாங்கி வரும் மழையால் மொத்த சென்னையும் ஜில்லென்று மாறி போயுள்ளது.

author-image
WebDesk
Jul 26, 2019 16:36 IST
chennai weather today

chennai weather today

tamil nadu weatherman : சென்னை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவில் பெய்து வருவது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக வெளுத்து வாங்கி வரும் மழையால் மொத்த சென்னையும் ஜில்லென்று மாறி போயுள்ளது.

Advertisment

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக, நல்ல மழை பெய்து வந்தது. இதற்கிடையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையும் தமிழக மலைப் பிரதேசங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், கடலோரப் பகுதிகளில் கன மழையை வாரி வழங்கி வருகிறது.

இது தண்ணீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வை தந்துள்ளது. வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சூழலில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு, ஆங்காங்கே உரிய ஏற்பாடுகளை செய்து வருவதையும் காண முடிகிறது. பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தனியார் வானிலை நிபுணரான, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உடனுக்குடன் மழை குறித்த அப்டேட்டுக்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கு மழை குறித்த அப்டேட் இதோ உங்களுக்காக..

" வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையானது இன்றும் சென்னையில் தொடர வாய்ப்பு இருக்கிறது. வெப்பச்சலனம் காரணமாக இரவு நேரத்தில் தான் மழிஅ பெய்யும்.செம்பரம்பாக்கம் ஏரிக்கென்று ஒரு நீர்பிடிப்பு இருக்கும். அந்த நீர்பிடிப்பு பகுதியில் ஒரே நேரத்தில் கனமழை பெய்யாது.

எசெம்பரம்பாக்கத்தின் மேல் 40 முதல் 50 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கலாமே தவிர, வறட்சியை போக்கம் அளவிற்கு நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுக்காது. வறட்சியை போக்க கூடிய அளவிற்கு மழை என்றால் அது வடகிழக்கு பருவமழையின் போது தான் பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு நிலையை பொருத்தவரையில் ஒரே நேரத்தில் மழை பெய்யும் போது தான், நீர் பிடிப்பு பெருக்கெடுக்கும். வெப்பசலனத்தால் ஏற்பட்டுள்ள மழையானது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 சதுர கிலோ மீட்டர் நீர்பிடிப்பு பகுதி என்றால், அதில் 10 முதல் 20 சதவீத இடத்தில் தான் மழை பெய்யும். இதனால் நீரை பெருக்க செய்ய முடியாது.

தற்போது பெய்துள்ள மழையால் நிலத்தடி நீர் உயராது. ஆனால் இதே போல இன்னும் பல நாட்களுக்கு தொடர் மழை பெய்தால் நிச்சயம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்” என்று தெரிவித்துள்ளார்.

#Rain In Tamilnadu #Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment