Advertisment

கனமழைக்கு தயாராகும் கடலோர மாவட்டங்கள்.. வானிலை மையம் அறிவிப்பு!

புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில்

author-image
WebDesk
New Update
Tamil Nadu Weather Forecast, Rain In Chennai

வானிலை நிலவரம்

chennai weather today weather news : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்கிறது

Advertisment

சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது.

இதேபோல், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், ஆவடி, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் தண்ணீர் ஆறாக ஓடியது, பல இடங்களில் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

இந்தநிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 72 மணி நேரத்தில் (நாளை மறுதினம்) கிழக்கு திசை காற்றில் நிலவும் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் நிலவரப்படி செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மையம் இயக்குனர்,, கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்

அவர் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவ.12 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai Weather Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment