இன்னும் 2 நாளைக்கு வெளுத்து வாங்க போகும் மழை… வெதர் ரிப்போர்ட்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்

chennai weather today weather today
chennai weather today weather today

chennai weather today weather today : சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தற்போது பெய்யத்துவங்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏராளமான ஏரிகள் நிரம்பியுள்ளன. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கொட்டித்தீர்த்தது.தேனியில் நேற்று காலை முதலே வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில்,

“குமரிக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 (19.11.2020) மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

19.11.2020 அன்று லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather today weather today rain upate today weather update

Next Story
முகமது இஸ்மாயில் மரணம்: நினைவுகளை பகிரும் தலைவர்கள்Janata Dal Secular tamil nadu leader mohammed ismayil passes away, jds mohammed ismayil passes away, மதச்சார்பற்ற தமிழக தலைவர் முகமது இஸ்மாயில் மரணம், முகமது இஸ்மாயில், கன்யாகுமரி, political leader condolence, thamimun ansari, jawahirullah, kanyakumari district
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com