சென்னையை பொறுத்த வரை வரும் ஞாயிற்றுக் கிழமை (நவ 17) காலை வரை மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழை நவம்பர் இரண்டாம் வாரத்தில் அதிகாரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையின் வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். அவரது தகவலின் படி, வரும் நவம்பர் 17-ஆம் தேதி காலை வரை சென்னையில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர் உயரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் நகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்யுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“