Chennai weather update heavy rainfall alert given Theni Dindigul regions : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையின் படி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
நேற்று அதிக அளவு மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
சேலம் மாவட்டத்தின் ஓமலூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பதிவானது.
திவருள்ளூரின் பள்ளிப்பட்டு, சோழவரம், செம்பரம்பாக்கம், திருவாலாங்காடு, பூந்தமல்லி ஆகியிஅ இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் தேவாலா, தர்மபுரி, காஞ்சியின் தாம்பரம், கோவையின் வால்பாறை ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தேனியின் பெரியார், கிருஷ்ணகிரியின் ஊத்தங்கரை, சேலம், அரக்கோணம், மற்றும் சோளிங்கர் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை
சென்னை வானிலையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவைக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்