Tamilnadu Weather, Cyclone Alerts: வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் புயல் வருகிற 16-ம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் தமிழகத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு பலத்த மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜ புயலால் சின்னாபின்னமான டெல்டா மாவட்டங்கள், இந்தப் புயல் செய்திகளால் மிரண்டது நிஜம். ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், டெல்டா மக்கள் சற்றே நிம்மதி ஆகிறார்கள். சென்னை மற்றும் வட மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்தப் புயலால் மழை கிடைத்தால் மகிழ்வார்கள். டிசம்பர் 15, 16 ஆகிய இரு தினங்களிலும் இந்தப் புயல் மழையைக் கொடுக்கும்.
மேலும் படிக்க : ஆந்திராவில் திங்கள் அன்று கரையைக் கடக்கிறது பெதாய் புயல்
New Cyclone at Bay Of Bengal: பெதாய் புயல், தற்போதைய நிலவரம்
இலங்கையின் திரிகோணமலைக்கு வடமேற்கே 670 கி.மீ தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ தொலைவிலும் 1090 கி.மீ தொலைவிலும், மசிலிப்பட்டினத்திற்கு 1090 கி.மீ தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டிருக்கிறது இந்த புயல்.
Bulletin 07: A #Depression over SE #BoB moved NW is about 670 km East of #Trincomalee, 930 km SE of #Chennai and 1090 km SE of #Machilipatnam. It is very likely to intensify into a #CyclonicStorm during next 24 hours and into a Severe Cyclonic storm during the subsequent 36 hrs. pic.twitter.com/WuuataFzcM
— TN SDMA (@tnsdma) 14 December 2018
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் - செய்தியாளர் சந்திப்பு
தற்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது அவர் “புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 13 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தின் பகுதிகளான ஓங்கோல் - காக்கிநாடாவிற்கு மத்தியில் இப்புயல் கரையைக் கடக்கும்” என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருக்கிறார். புயலின் காரணமாக வட கடலோர தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தரைக்காற்றானது 45 -55 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் அவர் கூறியுள்ளார். தென் மேற்கு வங்கக் கடல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#LIVE | வானிலை அறிக்கை! https://t.co/zV3ewElFFj
— News7 Tamil (@news7tamil) 14 December 2018
முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம்
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதால், புயலை சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தமிழக மீன்வளத்துறை அமைச்சகம்.
புயல் குறித்த வானிலை அறிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து நமது அமைச்சர் #djayakumar அவர்களின் தலைமையிலான மீன்வளத்துறை அறிக்கை@AIADMKOfficial @CMOTamilNadu @OfficeOfOPS pic.twitter.com/DaHPdOJnbe
— D.JAYAKUMAR (@djayakumarfans) 14 December 2018
Chennai Weather Update - 24 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக உருமாறும்
அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சென்னையை நோக்கி பெதாய் என்ற புயல் நகர்ந்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி தற்போது,
இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கே 750 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கும் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 1040 கி.மீ தொலைவிலும் மசிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 1210 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
Bulletin 05: A #Depression over SE #BoB moved NW is about 750 km SE of #Trincomalee, 1040 km SE of #Chennai and 1210 km SE of #Machilipatnam. It is very likely to intensify into a #CyclonicStorm during next 24 hours and into a Severe Cyclonic storm during the subsequent 24 hrs. pic.twitter.com/mU1aI6qlyV
— TN SDMA (@tnsdma) 14 December 2018
அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புயல் குறித்த தொடர்ச்சியான தகவல்களை தமிழக பேரிடர் மீட்புக் குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் இணையதளம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க : நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.