Advertisment

புயல் அபாயம் இல்லை, மழை நிச்சயம்: தமிழ்நாடு வானிலை லேட்டஸ்ட் அப்டேட்

Bay Of Bengal New Cyclone: புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், டெல்டா மக்கள் சற்றே நிம்மதி ஆகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu New Cyclone, Bay Of Bengal, Fresh Alerts, Weather Update: வங்கக் கடல் புதிய புயல், தமிழ்நாடு மழை

Tamilnadu New Cyclone, Bay Of Bengal, Fresh Alerts, Weather Update: வங்கக் கடல் புதிய புயல், தமிழ்நாடு மழை

Tamilnadu Weather, Cyclone Alerts: வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் புயல் வருகிற 16-ம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் தமிழகத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு பலத்த மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

கஜ புயலால் சின்னாபின்னமான டெல்டா மாவட்டங்கள், இந்தப் புயல் செய்திகளால் மிரண்டது நிஜம். ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், டெல்டா மக்கள் சற்றே நிம்மதி ஆகிறார்கள். சென்னை மற்றும் வட மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்தப் புயலால் மழை கிடைத்தால் மகிழ்வார்கள். டிசம்பர் 15, 16 ஆகிய இரு தினங்களிலும் இந்தப் புயல் மழையைக் கொடுக்கும்.

மேலும் படிக்க : ஆந்திராவில் திங்கள் அன்று கரையைக் கடக்கிறது பெதாய் புயல்

New Cyclone at Bay Of Bengal: பெதாய் புயல், தற்போதைய நிலவரம்

இலங்கையின் திரிகோணமலைக்கு வடமேற்கே 670  கி.மீ தொலைவிலும் , சென்னைக்கு  தென்கிழக்கே 930 கி.மீ தொலைவிலும் 1090 கி.மீ தொலைவிலும், மசிலிப்பட்டினத்திற்கு 1090 கி.மீ தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டிருக்கிறது இந்த புயல்.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் - செய்தியாளர் சந்திப்பு

தற்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது அவர் “புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 13 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தின் பகுதிகளான ஓங்கோல் - காக்கிநாடாவிற்கு மத்தியில் இப்புயல் கரையைக் கடக்கும்” என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருக்கிறார். புயலின் காரணமாக வட கடலோர தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தரைக்காற்றானது 45 -55 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் அவர் கூறியுள்ளார். தென் மேற்கு வங்கக் கடல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கொந்தளிப்புடன்  காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதால், புயலை சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தமிழக மீன்வளத்துறை அமைச்சகம்.

Chennai Weather Update - 24 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக உருமாறும்

அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சென்னையை நோக்கி பெதாய் என்ற புயல் நகர்ந்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி தற்போது,

இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கே 750 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கும் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 1040 கி.மீ தொலைவிலும் மசிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 1210 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புயல் குறித்த தொடர்ச்சியான தகவல்களை தமிழக பேரிடர் மீட்புக் குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் இணையதளம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க : நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment