Advertisment

அரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் , காரைக்கால் போன்ற பகுதிகளில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்

author-image
WebDesk
New Update
Chennai weather update New cyclone formed in Southeast Arabian sea

Chennai weather update New cyclone formed : அரபிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காராணமாக இன்று தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நாளை (15/05/2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் , காரைக்கால் போன்ற பகுதிகளில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

Chennai Weather

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு

Warning for Fishermen

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளா காரணத்தால் குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென் அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் (15/05/2021 - 16/05/2021) காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிக மழைப் பொழிவை பெற்ற பகுதிகள்

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரியின் பரூர் பகுதியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குமரி சித்தார் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடம்பூர், சிவலோகம் மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment