Chennai weather update today rmd report : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கைவிடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நேற்று காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்டது வருகிறது.கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, பாகலூர், உத்தனப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் இருந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
Chennai weather update today rmd report : சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உண்டு. அதிக பட்ச வெப்பநிலையாக 34 டிகிரி வெப்பமும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும்.
நேற்று அதிக அளவு மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
வேலூர் - 17 செ.மீ
கடலூர் - 13 செ.மீ
அரியலூர் - 12 செ.மீ
போலூர் - 11 செ.மீ
விழுப்புரம் - 10 செ.மீ
கொடவாசல் - 9 செ.மீ
தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
பண்ரூட்டி (கடலூர்), திருவாடனை(ராமநாதபுரம்), செந்துரை(அரியலூர்), திருவாரூர் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.
மேலும் படிக்க : அசுரத்தனம் காட்டிய தென்மேற்கு பருவமழை… 2-வது ஆண்டாக பெரும் சேதத்தை சந்தித்த கேரளம்
ஆழியாறு அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்படுகிறது
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்திருக்கும் அணைகள் நிரம்பின. சமீபத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஆழியாறு அணையில் இருந்தும் நீர் திறக்கப்படுகிறது. இன்று துவங்கி 135 நாட்களுக்கு (டிசம்பர் 31ம் தேதி வரை) தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும்.