Chennai weather updates Heavy rainfall thunderstorm warning : தமிழகத்தில் எப்போது துவங்குகிறது வடகிழக்கு பருவமழை என்பது துவங்கி தண்ணீர் தட்டுப்பாட்டினை சரி செய்ய மழை நீர் சேகரிப்பை எப்படி முறைப்படுத்துவது என பல்வேறு எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவோம். இன்று மழை வருமா வருதா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் கூறும் தகவல்கள் குறித்து ஒரு பார்வை.
Advertisment
கனமழை எச்சரிக்கை பெறும் பகுதிகள்
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். சில இடங்களில் மேகங்கள் கூடி மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸும் நிலவக்கூடும். இதே வானிலை நாளையும் தொடரும்.