வானிலை அறிக்கை: நீலகிரி, கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

அடுத்த நான்கு நாட்களுக்கு வடமேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் காற்று பலமாக வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Nilgiris, rain, coimbatore, heavy rain alert, today news

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

Chennai weather : சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பல்வேறு இடங்களில் பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக நிலவக்கூடும். குறைந்தபட்சமாக 26 டிகிசி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.

30/09/2021 மற்றும் 01/10/2021 தேதிகளில் மழை எங்கே?

இடியுடன் கூடிய கனமழை நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

02/10/2021 தேதிகளில் மழைக்கான வாய்ப்பு எங்கே உள்ளது?

மதுரை, விருதுநகர், திண்டுக்கல், மற்றும் குமரி போன்ற தென் தமிழக மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

03/10/2021 தேதிகளில் மழைக்கான வாய்ப்பு எங்கே உள்ளது?

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுடன் ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அடுத்த நான்கு நாட்களுக்கு வடமேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் காற்று பலமாக வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப் பொழிவு

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 5 செ.மீ மழை பதிவானது. கோவை சின்னக்கல்லார், வால்பாறை, சோலையாறு, சின்கோனா, குமரியின் மயிலாடி, இரேனியல், நாகர்கோவில், பேச்சிப்பாறை, குளித்துறை, சேலம் மாவட்டம் ஏற்காடு போன்ற இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai weather updates imd latest news heavy rain alert for next 4 days

Next Story
போஸ்டரில் முதல்வர் ஸ்டாலின் படத்தை பயன்படுத்திய அமமுக வேட்பாளர்!AMMK candidate uses CM MK Stalin images in campaign posters, AMMK candidate uses CM MK Stalin pictures, Kadaiyam union, ammk, dmk, tirunelveli district, போஸ்டரில் முதல்வர் ஸ்டாலின் படத்தை பயன்படுத்திய அமமுக வேட்பாளர், அமமுக, திமுக, முக ஸ்டாலின் கடையம் ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி தேர்தல், local body elections, kadayam, ammk candidate, cm mk stalin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X