Chennai weather updates KTC belt received huge rainfall : இந்த வருடத்தின் தென்மேற்கு பருவமழை அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று நல்ல மழையை தமிழகம் பெற்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடங்கிய மழை கடந்த இரண்டு நாட்களுக்கு வேலூரிலும் ஒரு காட்டு காட்டிச் சென்றுள்ளது. எப்போதும் தென்மேற்கு பருவமழையின் போது, அதிக மழைப் பொழிவை பெறாத இடங்களான வடக்கு கடலோர மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது.
திருச்சி துவங்கி கரூர் வரையிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்துள்ளது. சிவகங்கை, விருதுநகர், மற்றும் தூத்துக்குடியின் சில பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இனி மழை பெய்யவில்லை என்று மழையை குறை சொல்லாதீர்கள். சரியான மழை நீர் சேகரிப்பின் மூலம் மழையை சேகரிக்காமல் போனது உங்கள் தவறு தான்.
மழை நீர் சேகரிப்பு தொட்டி
இன்னும் மூன்று மாத காலத்திற்குள் உங்களின் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடத்திலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டியினை பொறுத்த வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். வேலுமணி அறிவித்துள்ளார். அப்படி மழை நீர் சேகரிப்பு முறையை அமைக்கவில்லை என்றால் தமிழக அரசு தக்க நடவடிக்கையை எடுக்கும் என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்த் பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.
மேலும் படிக்க : வேலூரில் வரலாறு காணாத கனமழை… ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்
நேற்று அதிக அளவு மழையை பெற்ற இடங்கள்
நேற்று கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது.
திருப்புவனம் - 17 செ.மீ
ஆம்பூர் - 12 செ.மீ
குடியாத்தம் (வேலூர்) - 9 செ.மீ
தேவகோட்டை, மதுரை விமானநிலையம் - 8 செ.மீ மழை
ராசிபுரம், திருப்பத்தூர், ஸ்ரீவில்லிப்புதூர், ஆண்டிபட்டி - 7 செ.மீ மழை
மேல் கூறிய இடங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது.