Advertisment

திருமழிசையில் காய்கறி விற்பனை துவங்கியது : பாதுகாப்பு தீவிரம்

கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையொட்டி, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai residents can now order vegetables, fruits on Swiggy, zomato cmda

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையொட்டி, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

Advertisment

திருமழிசை சந்தையில் 200 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருமழிசை சந்தையில் ஆந்திர, மகாராஷ்டிரா, மத்திய பிரேதேசம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் வாகனங்கள் எதிர்பார்க்கப்படுவதால், வியாபாரிகளுக்கு  இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, வெங்காயம், உருளைக்கிழங்கு பெரிய வாகனங்கள் தேவைப்படுவாதால்,  இந்த காய்கறிகளுக்கு மட்டும்  தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை ஒன்பது மணி நிவரப்படி  சந்தையில் இதுவரை 3 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 3500 டன் காய்கறிகள வந்து இறங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில், ஒவ்வொரு கடைகளுக்கும் இடையே 20 அடி இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தனி மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 இடங்களில் காவல்துறை பாதுகாப்பு மையமும், 2 சுகாதாரத்துறை மையமும் அமைக்கப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

முன்னதாக , திருமழிசை தற்காலிக  அங்காடியில் கோவிட்- 19 தொற்று தடுப்பகாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து   விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து,  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை  மாலை   திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்க நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.

திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை திறக்கப்படுவதால், காய்கறிகளின் விலை உயர்வு கட்டுபடுத்தப் படுவதுடன், விவசாயிகளும் பயனடைவர்  என்று தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment