சென்னை தொழிலதிபர் பெண்ணை கடத்தி வங்கதேசத்தில் கட்டாயம் மதமாற்றம் செய்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுக் குறித்து பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் என்.ஐ.ஏ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகள் லண்டனில் படித்து வந்தார். அந்த பெண் லண்டலில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக அவரின் தந்தை கடந்த மே மாதம் சென்னை பெருநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சர்ச்சையில் பிரபல மதபோதகர் பெயரும் அடிப்படுகிறது.
பின்பு, இந்த வழக்கு ஜூலை மாதம் என்.ஐ.ஏ-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. லவ் ஜிகாத கோணத்தில் வழக்கின் விசாரணை விரிந்தது. முதல் கட்ட விசாரணை அறிக்கையில், அந்த பெண் லண்டனில் படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு நஃபீஸ் என்ற நபர் அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், தான் நஃபீஸ் தனது தந்தை சர்தார் ஷெகாவத் உசேன் மற்றும் யாசிர் உதவியுடன் அந்த பெண்ணை வங்கதேசதுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
பின்பு அந்த பெண்ணுக்கு கட்டாய மதமாற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணை அவர்கள் வீட்டில் சிறை வைத்து பாலியல் துன்புறுத்தல், அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அங்கிருந்து தனது பெற்றோரை தொடர்பு கொண்டு அந்த பெண், நடந்த அனைத்தையும் அழப்படியே கூறி இருக்கிறார். பின்பு பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பெண்ணை கடத்தியவர்கள் தொழிலதிபரான அந்த பெண்ணின் தந்தையிடம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர்.
இந்த வழக்கு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக என்.ஐ.ஏ க்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டர்கள், பெண்ணை கடத்தி சென்றவர்கள் மீது ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்துதல், வன்முறை தாக்குதல் என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil