25 year old man tried to marry college senior on moving bus
23 வயதான இளம்பெண் ஒருவர், கடந்த செவ்வாய் கிழமையன்று தோசை மாவில் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை சேர்த்து கணவரை கொலை செய்திருக்கும் சம்பவம் அரங்கேயிருக்கிறது. இதற்கு உடந்தையாக இருந்த அப்பெண்ணின் நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
அனுப்ரியா எனும் அப்பெண், 26 வயதான தனது கணவர் சுரேஷ் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், உடற்கூராய்வில், சுரேஷுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், தனது ஆண் நண்பர் முரசொலி மாறன்(22) என்பவருடன் சேர்ந்து, கணவரை கொன்றதை அனுப்ரியா ஒப்புக் கொண்டார்.
Advertisment
Advertisements
அனுப்ரியா கணவர் சுரேஷ், புழல் அருகே புத்தகரம் பகுதியில் கறிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் அனுப்ரியாவை கடந்த கடந்த 2014ம் ஆண்டு விழுப்புரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயது குழந்தை ஒன்றும் இருக்கிறது.
சமீபத்தில் அனுப்ரியாவுக்கு கொளத்தூரில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலைக் கிடைத்தது. தனது மனைவி அதிக நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தததை விரும்பாத சுரேஷ், அவரைக் கண்டித்தார்.
நள்ளிரவில் மனைவி மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதைக் கண்டித்த சுரேஷ், சில முறை அவரை அடிக்கவும் செய்திருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கணவர் சந்தேகத்தின் காரணமாக மன உளைச்சல் இருந்த அனுப்ரியா, கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, இதுபற்றி தனது ஊரைச் சேர்ந்த வாலிபர் முரசொலி மாறனிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டனர்.
மருந்து கடையில் இருந்து பணி முடிந்து திரும்பிய அனுப்ரியா தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தார். இரவில் கணவர் சுரேசுக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை பொடி செய்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சுரேஷுக்கு கொடுத்தார். இதனை சாப்பிட்ட அவர் சிறிது நேரத்திலேயே தூங்க சென்ற பிறகு, இரவு 10.30 மணி அளவில் முரசொலி மாறனை அனுப்ரியா வீட்டுக்குள் வர சொன்னார்.
படுக்கையில் மயக்க நிலையில் இருந்த சுரேசை இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். அனுப்ரியா துப்பாட்டாவால் சுரேஷின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பிறகு முரசொலி மாறன் எதுவும் தெரியாதது போல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட, அனுசுயாவும் இரவு முழுவதும் வீட்டிலேயே தூங்கினார். காலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் கணவர் இறந்துவிட்டதாக போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணைக்குப் பிறகே அனைத்து உண்மைகளும் தெரியவந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news