யூனிபார்மை கழட்டிவிடுவேன்… போலீசை மிரட்டிய பெண் வழக்கறிஞர் கைதாகிறார்?

Chennai Women Advocate Issue : சென்னையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தக்கட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் வரும் வாகனங்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது,  அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து விசாரணை செய்தார்கள். அப்போது அப்போது அந்த காரில் இருந்தவர்கள் ஒரிய போக்குவரத்து அனுமதி இல்லாமல், ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சுற்றி வருவது தெரியவந்த்து.  

இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு போலீசார் அபராதம் விதித்தார்கள். இது தொடர்பாக அந்த பெண் தனது அம்மாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சொகுசு காரில் அந்த இடத்திற்கு வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், காவல்துறையினருடன்  கடுமையான வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். மேலும் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய அவர்,  யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று என்று ஒருமையில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து தாய், மகள் இருவர் மீதும், 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தாய் மகள் இருவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நடைபெற்ற இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில்,  போலீஸார் பேசிய மோசமான வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டு, தனுஜா பேசியது மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மனுதாரர் உணர்ச்சி வசப்பட்டே அவ்வாறு நடந்துள்ளார். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும், என வாதிடப்பட்டது. ஆனால் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த சம்பவத்தில், சம்பவத்தில் முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று கூறி முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai women advocate pre bail petition dismissed chennai high court

Next Story
திருநெல்வேலி அதிமுக போஸ்டர் யுத்தம்: இபிஎஸ் தரப்பு நாகரீக பதிலடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com