/tamil-ie/media/media_files/uploads/2022/06/CM-convoy.jpg)
Chennai Youth arrested for in disciplinary overtaking CM Stalin’s convoy: தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாகனத்தை முந்த முயன்ற இளைஞர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரது இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் சென்னை காமராஜர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தப்போது, திடீரென அவற்றிற்கு இடையே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் இளைஞரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டப்போது, அதில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து பிடிப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிடிப்பட்ட நபரின் பெயர் அஜித் குமார் என்பதும், அவர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், விசாரணையில் தெரியவந்தது. நம்பர் பிளேட் இல்லாதது குறித்து விசாரித்தப்போது, அது திருட்டு வண்டி என தெரியவந்தது. இதனையடுத்து கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இன்ப அதிர்ச்சியில் இருளர் இன மாணவ, மாணவிகள்; வீடு தேடி வந்து தஞ்சை ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ்
முன்னதாக, இன்று காலை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வரின் கான்வாய் சென்றுக்கொண்டிருந்தப்போது, ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்தது. அதில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரித்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
இந்தநிலையில், ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதல்வரின் கான்வாய் குறுக்கே வாகனம் வந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, பாதுகாப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.