சென்னை விமான நிலையத்தில் காணாமல் போனது காமராஜர் பெயர்
Chennai airport domestic terminal : சென்னை விமானநிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய டெர்மினலில் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai airport domestic terminal : சென்னை விமானநிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய டெர்மினலில் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமானநிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய டெர்மினலில் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணங்களுக்கென இரண்டு டெர்மினல்கள் உள்ளன. சர்வதேச டெர்மினல் பகுதி அண்ணா சர்வதேச விமானநிலையம் என்ற பெயரிலும், உள்நாட்டு டெர்மினல், காமராஜர் பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தது.
தற்போது விமானநிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் டெர்மினல்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள், இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு டெர்மினல் பகுதியில், கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் காமராஜர் பெயர் இடம்பெறவில்லை. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
விமான நிலையத்தின் பெயரை மாற்றவேண்டும் என்றால், அதுதொடர்பான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு பின் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். புதிய டெர்மினல்களுக்கு எம் ஜி ராமச்சந்திரன் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று சட்டசபையில், 2013ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. ஆனால், அது இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தார்மீக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் - கே எஸ் அழகிரி : விமான நிலையத்தின் பெயர் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். புதிய டெர்மினல் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தவுடன் காமராஜர் பெயர் வைக்கப்பட வேண்டும். இதுதவறும் பட்சத்தில், விமானத்துறை அமைச்சகத்திடம் முறையிடப்பட்டும். இந்த விவகாரத்தில் எங்களது தார்மீக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா விளக்கம் : விமான நிலையத்தின் பெயரை மாற்றும் திட்டம் தங்களுக்கு இல்லை. புதிய டெர்மினல் பணிகள் நிறைவடைந்தவுடன், புதிய கட்டடங்களுக்கு காமராஜர் பெயர் பலகை பொருத்தப்படும் என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பரிந்துரையின் படி அப்போதைய பிரதமர் வி பி சிங்கின் ஒப்புதலின்படி, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு டெர்மினலுக்கு காமராஜர் பெயரும், இன்டர்நேசனல் டெர்மினலுக்கு அண்ணா பெயரும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில், இன்டர்நேசனல் டெர்மினலுக்கு அண்ணா பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. உள்நாட்டு டெர்மினல், பெயர் இன்றி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil