Advertisment

சென்னையின் 4-வது ரயில் முனையம் மாற்றம் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு

சென்னையில் 4-வது ரயில் முனையம் வில்லிவாக்கத்திற்கு பதிலாக பெரம்பூரில் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
perambur

இந்த ஆண்டு விமான நிலையத்திற்கு இணையாக 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. (Wikimedia Commans)

சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ரூ. 2,65,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில வாரியாக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். 

Advertisment

இதைத் தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் கூறியதாவது: 

தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வேக்கு 879 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் 6, 362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அது நவீனமாக மாற்றப்பட உள்ளது.

இந்த ஆண்டு விமான நிலையத்திற்கு இணையாக 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கிண்டி,
பரங்கிமலை உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஏற்கனவே 10 புதிய ரயில்வே வழித்தட பணிகள் நடந்து வருகிறது. திண்டிவனம் – திருவண்ணாமலை, திண்டிவனம் – நகரி, சென்னை – கடலூர் (வழி மாமல்லபுரம்), மதுரை – தூத்துக்குடி, மொரப்பூர் – தர்மபுரி ஆகிய வழித்தட திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 
கடற்கரை முதல் எழும்பூர் வரை நான்காவது வழித்தட பணி செப்டம்பரில் முடிவடையும். எழும்பூர், சென்ட்ரல், கன்னியாகுமரி, தாம்பரம், கோவை, கும்பகோணம் ஆகிய ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிவடையும் என்றும் இதில் எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு தான் அதிக நிலம் தேவைப்படுகிறது. மாநில அரசு வேண்டும் என்றே திட்டத்தை தாமதப்படுத்தவில்லை, சுற்றுச்சூழல் காரணங்களுக்காக அனுமதி மறுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துவது என்பது மிகவும் நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய செயல்முறை, மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என கூற முடியாது. பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக பொதுப்பெட்டிகள் சேர்க்கப்படும். 2 பொதுபெட்டிகள் உள்ள ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் சேர்க்கப்படும். 6 முதல் 8 மாதங்களில் இவை செயல்படுத்தப்படும். 

சென்னை வில்லிவாக்கத்தில் நான்காவது ரயில் முனையம் அமைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பெரம்பூரில் நான்காவது ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டமிடல் பணிகள் நடந்து வருகிறது. பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை லைன் போடும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆய்வு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்து மத்திய ரயில்வே துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை இந்தாண்டு அக்டோபரில் அனுப்ப பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

அதன் பிறகு எப்பொழுது பெரம்பூர் முனையமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர் அறிவிப்பை ரயில்வே வாரியம் அறிவிக்கும் என கூறினார். தமிழகத்திற்கு புதிதாக 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்தால் விரைந்து பணியை முடிக்க தெற்கு ரயில்வே தயாராக இருக்கிறது.

மேலும், 3 வது ரயில் முனையமான தாம்பரத்தில் கட்டுமான பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் கூடிய முனையமாக தனியார் பங்களிப்போடு இந்த திட்டத்தை செயல்டுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திட்டறிக்கம் சமர்ப்பிக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகளை தமிழக அரசு முடித்து கொடுத்தவுடன் புதிய ரயில் நிலைய கட்டும் பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும்.

மொரப்பூர் - தர்மபுரி இடையிலான ரயில்வே திட்டம் 2027ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். மேலும் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போக தேவையான நிதி அவ்வப்போது கேட்டு பெறப்படும்.” என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment