சென்னையில் பதிவான காற்று மாசு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் வழக்கத்துக்கு மாறாக இன்று காசு மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெறும் நிலையில் சென்னையில் அனைத்து இடங்களிலும் காற்று மாசுபாடு 170-ஐ கடந்துள்ளது. அதன்படி, ஆலந்தூரில் 188, வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் மணலி, பெருங்குடியில் 200- ஆகவும் காற்று தரக் கட்டுப்பாடு பதிவாகி உள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. கோவையில் 149 ஆகவும், கடலூரில் 142 ஆகவும், காஞ்சிபுரத்தில் 136 ஆகவும், நாகப்பட்டினத்தில் 142 ஆகவும், தஞ்சாவூரில் 110 ஆகவும், திருவண்ணாமலையில் 142 ஆகவும் காற்று மாசுபாடு உள்ளது.
சென்னயில் அதிகப்பட்சமாக கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை காற்று மாசுபாடு 193 ஆக உள்ளது. இந்தக் காற்று இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“