சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) நேற்று ஜனவரி 21 கே.சி.பி.டி மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியது.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று KCBT மொபைல் செயலியை தொடங்கி வைத்தார்.
இது கலைஞர் நூற்றாண்டு புறநகர் பேருந்து நிலையத்தின் (KCBT) பயணிகளின் பயணத்தை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும்.
கே.சி.பி.டி.க்கு செல்லும் வழி, டி.என்.எஸ்.டி.சி மற்றும் எஸ்.இ.டி.சி சேவைகளுக்கான விரிவான பேருந்து தகவல்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் தகவல்களும் இந்த செயலி மூலம் பயணிகள் தற்போது எளிதாக அறிந்து கொள்ளலாம்.
பேருந்து நேரம், பயண காலம் மற்றும் எம்டிசி பேருந்து வழித்தடங்களை உள்ளடக்கிய விரிவான தகவல்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் KCBT இல் கிடைக்கும் பல்வேறு வசதிகளின் விவரங்களை தெரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.
பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலியின் மூலம் கருத்துகள் அளிக்கவும் மற்றும் புகார்கள் பதிவு செய்யவும் செயலியின் தரத்தை மேம்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.பேருந்தின் சரியான இடம், கட்டணம் என அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டு இருக்கும்.
அவசர தேவைக்கு உதவி எண்ணை உடனடியாக அணுகலாம். அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கான கேள்வி-பதில்கள் (FAQ) பகுதி மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறலாம்.
இந்த செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது. எனவே அனைவரும் எளிதில் அணுக முடியும். KCBT மொபைல் செயலியை Google Play Store, Apple App Store மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.