சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்குவதற்கு அடையாளம் காணப்பட்ட இடமான பண்ணூர், மற்றொரு இடமான பரந்தூரைவிட ஏற்ற இடமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று முன் சாத்தியக் கூறு அறிக்கை கூறுகிறது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் எங்கே அமையும் என்ற கேள்வி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக பெரிய விவாதமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து இறுதி செய்யும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் முன்மொழியப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் சில சவால்கள் இருந்தாலும், இரண்டு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடங்கள் என்று அறிக்கை கூறுகிறது.
சென்னையின் இரண்டாவது விமானம் நிலையம் அமைப்பதற்கு பண்ணூரில், 4,500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. அதே போல, பரந்தூரில், 4,791.29 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இரண்டு இடங்களிலும் இரண்டு ஓடுபாதைகளுக்கு போதுமான இடமும் வான்வெளியும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் ஒரு பயணி பயணிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் இந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது. “பண்னூருக்கு சாலை வழியாக சராசரி பயண தூரம் 49 கிமீ என்றும் அதற்கு சராசரியாக 1 மணி நேரம் 26 நிமிடங்கள் ஆகும். பரந்தூருக்கு சராசரியாக 73 கி.மீ தூரம் இருக்கும் அதற்கு சராசரியாக 1 மணி நேரம் 54 நிமிடங்கள் பயணிக்க ஆகும்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) நிபுணர்கள் குழு சில மாதங்களுக்கு முன்பு படாலம், பண்ணூர், திருப்போரூர் மற்றும் பரந்தூர் ஆகிய நான்கு இடங்களில் ஆய்வு செய்து, முன் சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரித்து பரிந்துரைகளை வழங்கினர். இதையடுத்து, மாநில அரசுடன் அதிகாரிகள் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பன்னூரில் அமைய வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. அதே நேரத்தில், இரண்டாவது விமான நிலையம் அமையும் இடத்தை இறுதி செய்வதில், டெல்லியில் செவ்வாய்க்கிழமை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், சென்னைக்கு அருகே எந்த ஊரில் விமான நிலையம் அமைப்பது என்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை முடிவு செய்யபப்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. புதிய விமான நிலையம் தொடர்பாக டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.