கோவளம் - நேப்பியர் பாலம் வரை: ரூ.5,000 கோடி செலவில் சென்னையில் வாட்டர் மெட்ரோ சேவை

கொச்சியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கொச்சியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Chennai water metro

கோவளம்-நேப்பியர் பாலம் வரை: ரூ.5,000 கோடி செலவில் உருவாகும் சென்னையின் புதிய வாட்டர் மெட்ரோ சேவை

கொச்சியின் வாட்டர் மெட்ரோ சேவையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

'தி இந்து' நாளிதழில் வெளிவந்த செய்தியின்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு மற்ற 10 நீர் வழித்தடங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்குமாறு நீர்வளத்துறை (WRD) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA), நீர்வளத்துறை (WRD) மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் (TNCB) போன்ற பல மாநில நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன. நேப்பியர் பாலம்- கோவளம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயைச் சீரமைத்து, தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.

சீரமைப்புப் பணிகளைச் செய்ய, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் தர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் நீரை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியவை நிறுவப்பட வேண்டும். "கால்வாயைச் சீரமைப்பதற்கும், வாட்டர் மெட்ரோவை இயக்குவதற்கும் மொத்தச் செலவு சுமார் 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி எங்கிருந்து கிடைக்கும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்த வாட்டர் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால், நீரின் ஓட்டம் சீராக இருக்கும், இதனால் வெள்ளத்தைத் தடுக்க முடியும். மேலும், புதுப்பிக்கப்பட்ட இந்தக் கால்வாய் சுற்றுலாப் பயணிகளைக் கவரும், தொழில்துறைக்குச் சுத்திகரிக்கப்பட்ட நீரையும் வழங்கும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க உதவும். இது தொடர்பான முன்மொழிவு விரைவில் நீர்வளத்துறையால் சமர்ப்பிக்கப்படும். அதன்பின், இந்தத் திட்டம் குறித்த முழு அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: