Advertisment

பி.பி.சி ஆவணப் படம்... அம்பேத்கர் சிலை அருகே பார்த்த சென்னையின் இளம் கவுன்சிலர் கைது

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்தை சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் சிலை அருகே பார்த்த சென்னையின் இளம் கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
cpm councilor arrest, bbc documentary, Gujarat Riot, Chennai young Councilor arrest,

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்தை சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் சிலை அருகே பார்த்த சென்னையின் இளம் கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ல் நடைபெற்ற மத கலவரம் குறித்து தி மோடி கொஸ்டின்' என்ற ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது.

2002-ல் குஜராத நடந்த கலவரத்த்தைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு, பிபிசி இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், பொதுவெளியில் இந்த ஆவணப்படத்தை திரையிட முயற்சி செய்தனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் டி.பி. சத்திரத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றுகூடி, பிபிசி ஆவணப்படத்தை தடை செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதில், சென்னை மாநகராட்சியின் இளம் கவுன்சிலரான சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினியும் கலந்துகொண்டார். அப்போது, கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தடை மத்திய அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்று குரல் கொடுத்தனர். இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை சாலையில் அமர்ந்து பார்த்தனர். இது குறித்டு தகவல் அறிந்து வந்த போலீசார், தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை பார்த்ததற்காக் கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

பிபிசி-யின் ஆவணப்படத்தை சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் சிலை அருகே பார்த்த சென்னையின் இளம் கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment