சென்னை புகைப்பட கலைஞரின் சந்திராயன் 2 போட்டோவுக்கு நாசா அங்கீகாரம்..

Chandrayaan -2 : ஒவ்வொரு வானியல் புகைப்பட கலைஞருக்கும், நாசாவின் இன்றைய நாளின் வானியல் போட்டோ விருது பெறுவது என்பது வாழ்நாள் கனவாகவே இருக்கும்

By: Updated: July 31, 2019, 01:51:16 PM

இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்ட சந்திராயன் 2, மேகக்கூட்டத்தை கிழித்துக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறும் வகையிலான போட்டோவை எடுத்த நீரஜ் லாடியாவின் போட்டோவுக்கு, நாசா, இன்றைய நாளின் வானியல் புகைப்படம் என்ற விருது வழங்கியுள்ளது.

 

chandrayaan2, isro, sriharikota, neeraj ladia chandrayaan2, isro, sriharikota, neeraj ladia

ஜூலை 22ம் தேதி மதியம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகள் அனைத்தும் சந்திராயன் 2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிகழ்வையே, தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தன. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணை நோக்கி புயலென புறப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், மேகக்கூட்டத்தை கிழித்துக்கொண்டு வான்பரப்பை விட்டு வளிமண்டலத்திற்குள் நுழையும் கடைசி நிமிட நிகழ்வை, பலர் போட்டோ எடுத்திருந்தாலும், நீரஜ் லாடியாவின் போட்டோவிற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, இன்றைய நாளின் வானியல் போட்டோ என்ற பெயரில் விருது வழங்கி அதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஸ்பேஸ் சென்னை என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ள லாடியா, சந்திராயன் 2 ஏவப்படும் நிகழ்வை படம்பிடிக்க, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகாட் ஏரியில் தனது குழுவினருடன் இருந்தார். ஒவ்வொரு வானியல் புகைப்பட கலைஞருக்கும், நாசாவின் இன்றைய நாளின் வானியல் போட்டோ விருது பெறுவது என்பது வாழ்நாள் கனவாகவே இருக்கும். தான் இந்த வானியல் புகைப்படத்துறையில் 8 ஆண்டுகளாக உள்ளேன்.

சந்திராயன் 2 வளிமண்டலத்தில் நுழையும் நிகழ்விற்காக காத்திருந்தேன். அதற்கு ஒளியும் எனக்கு கைகொடுக்கவே, எனது கேனான் 700 டி கேமராவின் மூலம் பல போட்டோக்களை எடுத்தேன். அதனை, நாசாவின் பார்வைக்கு அனுப்பியிருந்தேன். எனது படத்திற்கு நாசாவின் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது இந்த நாளை/ நிகழ்வை என்றைக்கும் மறக்க மாட்டேன் என்று நீரஜ் லாடியா கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennaites chandrayaan photo gets nasa recognition

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X