கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சனிக்கிழமை (நவம்பர் 12) விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (நவ. 12) காலை வரை வடமேற்கு திசையில் தமிழகம் புதுவை நோக்கி நகரக்கூடும். பின்னர், தமிழகம் கேரள பகுதிகளைக் கடந்து அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும்.
இதனால், அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், திருவாரூர், சேலம், தருமபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 12) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
1) சென்னை,
2) திருவள்ளூர்,
3) காஞ்சிபுரம்,
4) செங்கல்பட்டு,
5) விழுப்புரம்,
6) கடலூர்,
7) வேலூர்,
8) மயிலாடுதுறை,
9) நீலகிரி,
10) திருவாரூர்,
11) தஞ்சாவூர்,
12) கரூர்,
13) புதுக்கோட்டை,
14) சேலம்,
15) கள்ளக்குறிச்சி,
16) அரியலூர்,
17) பெரம்பலூர்,
18) திருச்சி,
19) தருமபுரி,
20) திருவண்ணாமலை,
21) கோவை,
22) திண்டுக்கல்,
23) தேனி,
24) திருப்பத்தூர்,
25) இராமநாதபுரம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“