Tamil Nadu CM MK Stalin inspects arrangements for Chess Olympiad, unveils exquisite sculpture: 44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி வியாழக்கிழமை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மாமல்லபுரத்தின் நுழைவாயிலில், அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கழக (தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்) கைவினைஞர்களால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார்.
45 அடி உயரக் கலைப் பகுதி, கைவினைக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது, பழங்கால கடற்கரைக் கோயில் மற்றும் நினைவுச்சின்னங்களின் வரிசையில் பாரம்பரிய நகரமான மாமல்லபுரத்திற்கு இந்த சிற்பம் கூடுதல் சிறப்பைத் தந்துள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னையில் 2 நாள் மோடி நிகழ்ச்சிகள் முழு விவரம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேலும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் பிரமாண்டமான செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், செஸ் போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி ஆகிய இடங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தனது செய்தி குறிப்பில், “வசுதைவ குடும்பம்’ (உலகம் ஒரு பெரிய குடும்பம்) என்ற உண்மையான உணர்வோடு பங்கேற்போம், போட்டியிட்டு, புதிய விளையாட்டுத் திறனைப் பெறுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதில் இருந்தும் வரும் உள்ள சதுரங்க வீரர்களை வரலாற்று மற்றும் கலாச்சார தளங்களைப் பார்வையிடவும், தமிழ்நாட்டின் காலமற்ற, தெளிவான மற்றும் துடிப்பான ஆன்மீக செழுமையின் ஒரு பகுதியாக இருக்கவும் ஆளுனர் அழைப்பு விடுத்தார்.
"உலகளாவிய தொற்றுநோயின் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை, புதிய மாறுபாடுகள் புதிய சவால்களை முன்வைக்கின்றன. எனவே, அனைவருக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் ஆளுனர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) செஸ் பிரியர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு "ஹாப்-ஆன் மற்றும் ஹாப்-ஆஃப்" இலவச சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள 14 முக்கிய சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் ஐந்து பேருந்துகளை TTDC இயக்கும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஊக்கப் பயணத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் படித்து வெற்றி பெற்ற மாணவர்கள், இங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுதந்திர தின அமுதப் பெருவிழா, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து வீடுகளிலும் "ஹர் கர் திரங்கா" அனுசரிக்கப்படும்.
மத்திய கலாச்சார அமைச்சகத்தால் வழிநடத்தப்படும் இந்த பிரச்சாரம், குடிமக்கள் மூவர்ணக் கொடியை ஏறக்குறைய எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூவர்ணக் கொடியுடனான செல்ஃபியை ஒருவர் https://hargartiranga.com இணையதளத்தில் பதிவேற்றலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil