Advertisment

சிதம்பரம் நடராஜர் கோயில்: வரவு, செலவு விவரங்களை அளிக்க தீட்சிதர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு விவரங்களை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chidambaram
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

அறநிலையத் துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி 6 அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோயிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,  சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தொடர்ந்து, வருமான வரித் தாக்கல் விவரங்களையும், கோயிலில் சட்டவிரோத கட்டுமான பணி மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் நிரூபிக்க நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Chidambaram Temple
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment