சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்; சிவ வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடந்த 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், திங்கள்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பிரதான நிகழ்ச்சியான ஆனித் திருமஞ்சன தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.

கடந்த 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், திங்கள்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பிரதான நிகழ்ச்சியான ஆனித் திருமஞ்சன தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
cart chidambaram

சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இன்று  (ஜூலை 1) நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

Advertisment

கடந்த 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், திங்கள்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பிரதான நிகழ்ச்சியான ஆனித் திருமஞ்சன தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது. சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர்.

car

பின்னர் இன்று  இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை (நாளை) அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

Advertisment
Advertisements

பின்னர்,காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்பு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திரு மஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும்.

car

ஜூலை 3-ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 4-ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெறும். ஆனித் திருமஞ்சன உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலர் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Chidambaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: