New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/12/chidambaram-nataraja-temple-deiveega-bakthargal-peravai-devotional-forum-complain-human-rights-commission-tamil-news-2025-08-12-19-01-56.jpg)
மனித வழிபாட்டு உரிமையை தடுப்பதற்கு தீட்சிதர்களுக்கு உரிமை இல்லை என்று தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமிய மறைத்து தூக்கி செல்லும் விவகாரம் தொடர்பாக தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா புகார் அளித்துள்ளார்.
மனித வழிபாட்டு உரிமையை தடுப்பதற்கு தீட்சிதர்களுக்கு உரிமை இல்லை என்று தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பல்லவ, சோழ ,சேர, பாண்டிய ,நாயக்க மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரரசு மன்னர்களால் கட்டப்பட்ட உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனத்தை யொட்டி கடந்த ஜூன் 1-ந் தேதி தேரில் இருந்து சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜ மூர்த்தியை கிழக்கு கோபுற வாயில் வழியாக ஆயிரங்கால் மண்டபத்திற்கு ஊர்வலமாக தூக்கி சென்றனர்.
அப்போது கிழக்கு கோபுர வாயில் அருகே வலது மற்றும் இடது புறத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை வழிபட காத்திருந்தனர். ஆனால் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் சுவாமியை வலது புறத்தை மட்டும் பிளாஸ்டிக் பைப்பில் கட்டப்பட்ட துணியால் மறைத்து ஊர்வலமாக பொது தீட்சிதர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் சுவாமியை வழிபட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சிவகாமசுந்தரி அம்பாள் நடராஜர் மூர்த்தியை ஆயிரம் கால் மண்டபத்திற்கு தூக்கி செல்லும் போது, வழி நெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபாராதனை எடுத்து வணங்கும் நடைமுறை பல நூற்றாண்டுகாலமாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்பிலுள்ள அடிப்படை மனித உரிமை யான தனி பட்ட மனிதனின் வழிபாட்டு உரிமையை எந்த ஒரு அரசோ, அதிகாரம் படைத்த குழுவோ தடுப்பதற்கு அதிகாரம் இல்லை .
எனவே, மனித வழிபாட்டு முறையை தடுக்கும் செயலில் ஈடுபட்ட பொது தீட்சிதர்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி வரும் காலங்களில் மார்கழி ஆருத்ரா, ஆணி திருமஞ்சனத்தின் போது வலதுபுறம் மட்டும் துணியால் மறைத்து தூக்கி செல்லும் நடைமுறையை கைவிட்டு பக்தர்கள் வழிபட உரிய நடவடிக்கை எடுத்து மனித வழிப்பாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், இதே கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.