தீக்குளிப்பு போராட்டம் சட்டவிரோதமானது: நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சிதம்பரம் டி.எஸ்.பி-யிடம் மனு

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நடத்த வலியுறுத்தி தீக்குளிப்பு போராட்டம் அறிவித்துள்ளது நீதிமன்றத்தை அவமதிப்பதும், சட்ட விரோதமானது என சிதம்பரம் கோயில் நடராஜர் பொதுதீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நடத்த வலியுறுத்தி தீக்குளிப்பு போராட்டம் அறிவித்துள்ளது நீதிமன்றத்தை அவமதிப்பதும், சட்ட விரோதமானது என சிதம்பரம் கோயில் நடராஜர் பொதுதீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Chidambaram Nataraja Temple priest petition to DSP Tamil News

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நடத்த வலியுறுத்தி தீக்குளிப்பு போராட்டம் அறிவித்துள்ளது நீதிமன்றத்தை அவமதிப்பதும், சட்ட விரோதமானது என சிதம்பரம் கோயில் நடராஜர் பொதுதீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை நடத்த அனுமதிக்க கோரி தெய்வீக பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதாகிருஷ்ணன் வருகிற மே.28-ம் தேதி தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் த,சிவசுந்தர தீட்சிதர் சிதம்பரம் டி.எஸ்.பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக்கிடம் அளித்துள்ள புகார் மனுவில் குறியிருப்பதிவது 

Advertisment

கடந்த மூன்று வருடங்களாக தனிநபர் எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவர் பொது தீட்சிதர்களின் நிர்வாகத்திற்கும், அமைதியான பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு செய்யும் வகையில் பாரம்பரிய பூஜை வழிபாடு மற்றும் தரிசன முறைகளுக்கு மாறாக பொது தீக்ஷிதர்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய் புகார்களும், பொது வெளியில் பொய் பிராச்சரங்களும் தேவையற்ற வழக்குகளையும் தாக்கல் செய்து வருகிறார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் ஒரு தரப்பினராக உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீ கோவிந்தரஜா பிரமோற்சவம் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வில் பின்வரும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஒரு வழக்கு மேற்சொன்ன எம்.என்.ராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் W.P. No.33865/2023 (M.N. ராதாகிருஷ்ணன்) மற்றும் W.P. No.20468/2024 (டி.ஆர்.ரமேஷ்) சிறப்பு அமர்வில் இரண்டு வழக்குகள் நிலுவையிலுள்ளது.  உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள பொழுது பிரமோற்சவம் சம்பந்தமாக எம்.என்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ள தீக்குளிப்பு போராட்டம் சட்டவிரோதமானது. 

அதேபோல் தில்லை கோவிந்தராஜா சந்நிதி கொடிமரம் மாற்றி அமைப்பது சம்பந்தமாக சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண்.509/2024 நிலுவையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் கோயில் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் ஆஜராகி வாதாடிய வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில் கொடிமரம் தற்போதைய நிலையில் நீடிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடிமரம் நல்ல நிலையில் உள்ளதை மறைத்து கொடிமரம் சேதமடைந்துள்ளது என்பதை குறிப்பிட்டு அவதூறாக மேற்சொன்ன எம்.என்.ராதாகிருஷ்ணன் பார்வையில் குறிப்பிட்ட மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

நடராஜர் கோயிலில் அமைதியான முறையில் சைவ வைணவ பக்தர்கள் நல்லிணக்கத்தோடு வழிபாடு மற்றும் தரிசனம் செய்வதை வெறுப்புணர்வு தூண்டும் வகையில் தீக்குளிப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து வெறுப்புணர்வு மற்றும் பிளவை ஏற்படுத்தும் மேற்சொன்ன எம்.என்.ராதாகிருஷ்ணன் மீது  உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தாங்கள் உடனடியாக குற்ற வழக்கு பதிந்து நடராஜர் கோயிலுக்கும், பொது தீட்சிதர்களுக்கும். பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், 28.05.2025 அன்று நடராஜர் கோயிலில் அமைதியான தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். மேலும் பொது அமைதிக்கு பங்கம் தரும் வகையில் வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் எம்.என்.ராதாகிருஷ்ணன் மீது உரிய பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 196-ன் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் மேலும் உபகோட்ட நடுவருக்கு (Sub Collector) பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் எம்.என்.ராதாகிருஷ்ணனின் தீக்குளிப்பு போராட்ட அறிக்கை அறித்து அத்தகைய போராட்டத்தை தடை உத்தரவு பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்தி: பாபு ராஜேந்திரன் - சிதம்பரம். 

Chidambaram Temple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: