குழந்தைகளுடன் பைக்கில் சென்றவரிடம் விசாரணை என்ற பேரில் அத்துமீறல் : இடம் மாற்றம் செய்து அறிவித்த எஸ்.பி.

சோதனையில் ஈடுபட்ட இரண்டு காவல்துறையினரையும் ஆயுதமேந்திய காவல் படைக்கு இடம் மாற்றி உத்தரவு

By: Updated: October 16, 2019, 1:00:28 PM

Chidambaram policemen harass couple transferred : சிதம்பரம் காவல்நிலையத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கான்ஸ்டபிள் மரியா சார்லஸ் ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமையன்று வாகன ஓட்டிகள் சாலை விதிகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்று சோதனை நடத்தினர். அப்போது அந்த சாலையில் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணித்து வந்தார்.

வேல்முருகன் அவரிடம் ஓட்டுநர் உரிமை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருக்கிறதா என்று சோதனையிட்டார். பிற்கு இரண்டு சக்கர வாகனங்களில் ஏன் 4 பேர் பயணிக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பின்பு அதற்கான கட்டணத்தை கட்டிவிட்டு அங்கிருந்து செல்லும் படியும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : வேற்று மத ஜோடியினருக்கு அனுமதி மறுத்த ஹோட்டல்! காவல்துறை உத்தரவால் செயல்படுவதாக அறிவிப்பு

அதற்கு அந்த தம்பதிகள் ”இருவரும் சின்ன குழந்தைகள் தான். வெளியில் வரும் போது இருவரையும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வர இயலாது என்று கூறியுள்ளார். ஆனாலும் காவல்துறை அதிகாரி, உண்மையான ஆவணங்களை காண்பித்துவிட்டு வண்டியை எடுத்துச் செல்லுங்கள் என்று காட்டமாக பேசியுள்ளார். அந்த தம்பதியினர் எவ்வளவு தூரம் சமாதானம் கூறியும் அதனை காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர். அந்த பெண்மணி தன்னுடைய கணவனை விட்டுவிடுங்கள் என்று கேட்டு கதறி அழுதுள்ளார். அவரைப் பார்த்து அவர்களுடைய குழந்தைகளும் அச்சத்தில் வீறிட்டு அழுதனர்.  இந்த நிகழ்ச்சி அனைத்தையும் அருகில் இருந்தவர்கள் ஸ்மார்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அந்த வீடியோ வைரலாக பரவியது.

இந்த விவகாரம் கடலூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வரை சென்றுவிட அவர் சோதனையில் ஈடுபட்ட இரண்டு காவல்துறையினரையும் ஆயுதமேந்திய காவல் படைக்கு இடம் மாற்றி உத்தரவை பிறப்பித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chidambaram policemen harass couple transferred to armed police wing by cuddalore sp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X