Advertisment

கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Chidambaram Chennai

சிதம்பரம் கோயில் விவகாரம்ம் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

 
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் நீதிமன்ற உத்தரவு படி அறநிலையத்துறை செயல்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இனியும் தீட்சிதர்களோடு போராட வேண்டிய அவசியம் அறநிலையத்துறைக்கு இல்லை என்றும் சிதம்பரம் நடராஜர் கோயில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அறநிலையத்துறை கீழ் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து  தீட்சிதர்கள் சார்பி்ல் தொடரப்பட்ட வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. கோயில் நிர்வாகத்தை தீட்சி்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்றார்.

இந்நிலையில் அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆறுகால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தீட்சிதர்கள் சுய ஒழுங்கு இல்லாமல் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

“இந்த விவகாரத்தில் அரசுக்கும், பொது தீட்சிதர்கள் தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதலை தவிர்க்க வேண்டும், கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்பதை தீட்சிதர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் இந்த விவகாரத்தில் தீட்சிதர்கள் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்ததால்தான் அரசு தலையிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது” என்றனர்.

அதையடுத்து நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக நேரம் மற்றும் அதற்கான வழிமுறைகளுடன் திட்டம் வகுத்து வரும் நவம்பர் 14ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில்  சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அதனால் நீதிமன்ற உத்தரவு படி அறநிலையத்துறை செயல்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Chidambaram Temple High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment