கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், கொரோனா பெருந் தொற்று மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக நேற்று காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதையாக 72 குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து ட்விட்டரில், "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே..." என தெரிவித்துள்ளார்.
150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அதை வெற்றிகரமாக பயணிக்க வைத்தார். கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை எட்டினார் என்பது நினைவு கூறத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“