Advertisment

மறுவடிவம் பெறும் முதல்வரின் ‘சிங்காரச் சென்னை’ திட்டம்!

மாணவர்கள் அடிப்படைக் கல்வி கொள்கைகளைக் கற்க அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணித பூங்கா ஆகியவை நகரத்தில் உருவாக்கப்படும்.

author-image
WebDesk
New Update
மறுவடிவம் பெறும் முதல்வரின் ‘சிங்காரச் சென்னை’ திட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு வந்த சிங்காரச் சென்னை திட்டம், மீண்டும் புதுப்பொலிவுடன் ‘சிங்கார சென்னை 2.0’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் ​ ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தை தொடங்கினார். அதன் பிறகு, தமிழகத்தில் அதிமுக அரசு தொடர்ந்து அமைந்த நிலையில், திமுக வின் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது.

Advertisment

நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், சிங்காரா சென்னை திட்டத்திற்கான முன் முயற்சியின் இரண்டாம் கட்டத்திற்கான திட்டங்களை இறுதி செய்வதற்காக ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் நகரப்பகுதிகளை அழகுபடுத்தல், பாரம்பரியம் பேணுதல், கலாச்சாரம் மற்றும் கலைகளை அணுகல் மற்றும் அவற்றின் உள்ளடக்கம் வெளிப்படுத்துதல், கல்வி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், போக்குவரத்து மற்றும் இயக்கம், மின் ஆளுமை மற்றும் கண்டுபிடிப்பு, நகர்ப்புற இடங்களை மறுபரிசீலனை செய்தல் என முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நகரின் அழகுபடுத்தலில் ‘Project Blue’ முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் பல கடற்கரைகளின் விரிவான வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். நகரத்தில் நீருக்கடியில் மீன்வளம் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான அக்வா மண்டலங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்கரை முகப்பு வளர்ச்சி திருவொற்றியூர் மற்றும் உத்தண்டி உள்ளிட்ட ஆறு இடங்களை செயல்படுத்தப்படும். இதில், 21.6 கி.மீ. பவளப்பாறைகளின் தலைமுறைக்கு பயோராக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான கடற்கரைகளை பார்க்கும் தளங்கள் கடற்கரைகளில் உருவாக்கப்படும்.

சிங்காரா சென்னை 2.0 இன் ஒரு பகுதியாக அண்ணா டவர் பூங்காவை மறுவடிவமைப்பதற்காக பொது ஆலோசனையை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால், நகரில் இந்த இடத்திற்கான மதிப்பு கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்களும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாடி பூங்கா மற்றும் விக்டோரியா பப்ளிக் ஹால் போன்ற பாரம்பரிய அடையாளங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.

மாணவர்கள் அடிப்படைக் கல்வி கொள்கைகளைக் கற்க அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணித பூங்கா ஆகியவை நகரத்தில் உருவாக்கப்படும். திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு செல்லப்பிராணி பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் பல விளையாட்டு வளாகங்களும் உருவாக்கப்பட உள்ளது. மாநகராட்சியின் குடிமை அமைப்பு 1913 என்ற ஹெல்ப்லைன் மேம்படுத்தப்படும். மேலும், சென்னை வாசிகளுக்காக ஒரு சமூதாய வானொலி தொடங்கப்படும். அனைத்து கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வசதிகள் மற்றும் உயர் கல்வி ஆதரவு கிடைக்கும்.

சிங்காரா சென்னை 2.0 சூழலியல், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கும். வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மைக்கான உலகளாவிய இடமாக நகரத்தை மறுவடிவமைப்பு மற்றும் மறுவடிவமைப்பு செய்வதே இதன் நோக்கமாக கொண்டு செய்ல்படுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், எழும்பூர் மற்றும் கிண்டி ரயில் நிலையங்களுக்கான பகுதி மேம்பாட்டு திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Mk Stalin Greater Chennai Corporation Gagandeep Singh Bedi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment