Advertisment

கஜ பேரழிவு: முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி?

முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் கஜ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்க கீழ் கண்ட வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chief Minister Public Relief Fund

Chief Minister Public Relief Fund

Cyclone Gaja, Chief Minister Public Relief Fund  : கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 1000 கோடி ரூபாய் நிதியை அறிவித்திருக்கும் தமிழ்நாடு அரசு, அதற்காக முதல்வர் நிவாரண நிதி திரட்டுவதாகவும் அறிவித்திருக்கிறது. கஜ புயலால் பாதிக்கப்பட்டவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி? இந்தக் கட்டுரையில் விவரம்:

Advertisment

கஜ புயல் கடந்த வியாழன் இரவு அன்று கடலூர் மற்றும் பாம்பன் பகுதிக்கு இடையே நாகப்பட்டினம் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவேரி நீர் பிரச்சனை, மீத்தேன் எடுத்தல், ஹைட்ரோ கார்பன் விவகாரம் ஆகியவை டெல்டா பகுதி மக்களை வெகுவாக பாதித்திருந்த நிலையில் கஜவின் தாக்கம் மேலும் மோசமான சூழலை டெல்டா பகுதியில் உருவாக்கியிருக்கிறது.  மேலும் படிக்க : கோர தாண்டவம் ஆடிய கஜ புயல்

கஜ பாதிப்பு - Chief Minister Public Relief Fund  மூலம் நிதி உதவி

கடலூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் பல்வேறு வகையில் இழப்புகளை சந்தித்துள்ளன. கால்நடைகள், அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள், தென்னைகள், வாழைகள் என அனைத்தையும் இழந்து நம் சொந்தங்கள் டெல்டா பகுதியில் வாடி வருகிறார்கள். 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமாகியுள்ளன.

வீடுகளின் கூரைகள், மதிற்சுவர்கள், அடிப்படைப் தேவைகள் என அனைத்தையும் இழந்துள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின் படி சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் மற்றும் குடிசைகள் பாதிப்படைந்துள்ளன. மேலும் மின்கம்பிகள், மின்மாற்றிகள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. மீனவ குடியிருப்புப் பகுதிகளில் மீன்பிடி படகுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

ஆங்காங்கே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்கள் பலர் குழுக்களாக இணைந்து தங்களால் ஆன உதவியினை டெல்டா மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு செய்து வருகிறார்கள்.

சிலருக்கு நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து பணம் அல்லது பொருளுதவி செய்தால் தங்களின் அர்பணிப்பும் உழைப்பும் வீணாகமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை வரும். அவர்கள் எப்படி அரசின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அளிக்கலாம் என்று பட்டியலிடுகிறது இந்த கட்டுரை.

கஜ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி (Chief Minister Public Relief Fund ) மூலம் எப்படி நிதி உதவி அனுப்புவது ?

வங்கி அல்லது இணைய சேவை

வங்கி அல்லது இணைய சேவை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள், இந்த இணைய தளம் மூலம் பணம் செலுத்தி ரசீதினை பெற்றுக் கொள்ளலாம். https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

வங்கி வரைவோலை மற்றும் காசோலை

குறுக்குக் கோடிட்ட காசோலை மற்றும் வரைவோலை மூலமாக பணம் அளிக்க விரும்புபவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு காசோலை அனுப்பி வைக்கலாம்.

அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்

முதலமைச்சர் பொது நிவாரண நிதி

நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,

சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா

மின்னஞ்சல் முகவரி - dspaycell.findpt@tn.gov.in

Electronic Clearing System மூலமாக பணம் செலுத்த

எலக்ட்ரானிக் க்ளியரிங் சிஸ்டம் மூலமாக கீழ் கண்ட வங்கிக்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை - தலைமைச் செயலகம், சென்னை - 600 009

சேமிப்புக் கணக்கு எண் 117201000000070

IFS Code - IOBA0001172

CMPRF PAN - AAAGC0038F

இதன் மூலம் பணம் செலுத்துபவர்கள், இதனுடன் பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் அதனுடைய கிளை, பணம் செலுத்தப்பட்ட செய்தி, நிதி அனுப்பியதற்கான எண், முகவரி, மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இந்த விவரங்கள் இருக்கும் பட்சத்தில் அலுவலக பற்றுச் சீட்டினை அனுப்புவது மிகவும் எளிமையாக இருக்கும்.

மேலும் பெறப்படும் நிவாரண நிதிகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G)ன் கீழ் 100% வரிவிலக்கு அளிக்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு

வெளிநாடு வாழ் மக்கள் IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai - என்ற Swift Code மற்றும் முகவரிக்கு பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிரிருந்து (NRI) பெறப்படும் நிதிக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டம் 2010 பிரிவு 50ன் கீழ் விலக்கு அளிக்கப்படும். இதற்கான இந்திய உள்துறை அமைச்சக அணை எண் F.NO 11/21022/94 (1124) 2015-FCRA-III dated 22.12.2015.

10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் அனுமதி பெற்று முதலமைச்சரை நேரில் சந்தித்து அனுப்பலாம்.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment