சென்னை மாகாணம் என்ற பெயரிலான நிலப்பரப்பு, 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடாக உருவாக்கப்பட்டது.
அதனை போற்றும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!
தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“