சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் தாக்கியது. இந்தப் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. புயல் காரணமாக சென்னையில் அதிகளவு மழை பெய்தது.
இதனால், பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட்டுவருகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் இண்டர்நெட் வேலை செய்யவில்லை. இது தொடர்பாக பேசிய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, “சென்னையில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் நாளை (டிச.7) மாலைக்குள் சரி செய்யப்படும்” என்றார்.
இதற்கிடையில் கடந்த 3 நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் இன்னும் ஒரு சில பகுதிகளில் தேங்கியுள்ளதால், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் - 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் - 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“