தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 30 மணிநேரத்தில் காயல்பட்டினம் பகுதியில் 116 செமீ மழை பதிவாகி உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கிய 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் முழுமையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்விநியோகம் சரியாக உள்ளது. 48 மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மீட்புபடையினர் போதுமான அளவிற்கு உள்ளனர். 323 படகுகள் கூடுதலாக செயல்படுத்தி உள்ளோம்” என்றார்.
தொடர்ந்து, தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில், அடுத்த 3 மணிநேரத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“