Advertisment

வெள்ள நிவாரணத் தொகை ரூ 6000 வழங்கும் நடைமுறை: திங்கட்கிழமை அரசாணை வருவதாக தலைமைச் செயலாளர் பேட்டி

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும் முறை குறித்து திங்கள்கிழமை அரசாணை வெளியாகும்” என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Sivdas Meena CS

தலைமைச் செயலாளர் பேட்டி சிவ்தாஸ் மீனா

“சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. போர்க்கால அடிப்படையில் அனைத்து பகுதியிலும் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகிறோம்; வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும் முறை குறித்து நாளை (11.12.2023) அரசாணை வெளியாகும்” என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (10.12.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவ்தாஸ் மீனா, “சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. போர்க்கால அடிப்படையில் அனைத்து பகுதியிலும் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகிறோம்; வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும் முறை குறித்து நாளை (11.12.2023) அரசாணை வெளியாகும்” என்று கூறினார். 

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியதாவது: “சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒன்றிய குழு 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை இந்த குழு ஆய்வு செய்யும்.

சென்னையில் தற்போது இயல்பு நிலை திரும்பிவருகிறது. தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் தற்போது சரியாகி வருகிறது. தண்ணீர் தேவைப்படும் பகுதிகளில் சொந்த பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் வழந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இப்போது நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு சவால் குப்பைகள்தான். புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட குப்பைகளும் சுத்தம் செய்யப்படுவதற்கான வேலைகளும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாளைக்குள் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்படும்.  நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், அங்கு தண்ணீர் தேங்கமல் இருக்க மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வது , குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெள்ளநிவாரணம் தொடர்பான அரசாணை நாளை வெளியாகும். அதில் அனைத்து தகவல்களும் இருக்கும். பல்வேறு பகுதிகளில் மழை நின்ற பின்னர் தண்ணீர் வேகமாக வடிந்துவிடடது. தி.நகர் , சீத்தாம்மாள் காலனி போன்ற பகுதிகளில் எல்லாம் மழை நீர் கடந்த ஆண்டுகளில் எல்லாம் அதிகமாக தேங்கியிருந்தது. ஆனால், தற்போது அங்கு தண்ணீர் தேங்கவில்லை. நேற்றே மாநகர் முழுவது மின்சாரம் வழங்கியுள்ளோம்.

மாநகராட்சியில் உள்ள 6 பள்ளிகள் தாழ்வான பகுதியில் உள்ளதால், அங்கு தற்போது தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதை சரி செய்வதற்கான பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது” என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்

இதனிடையே, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (09.12.2023) உத்தரவிட்டிருந்தார். இந்த நிவாரணத் தொகையைபாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

shivdas meena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment