/tamil-ie/media/media_files/uploads/2023/07/rajiv-hospital-3col.jpg)
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்து குழந்தையின் வலது கை அகற்றப்படும் சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீரின் (வயது 32), 1½ வயது ஆண் குழந்தை முகமது மகிரின் தலையில் நீர் கட்டியிருந்ததால் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மே மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில், அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த 'டியூப்' கடந்த மாதம் 25-ந்தேதி, இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது.
இதனால், உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தையை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர், குழந்தையின் இடது கை மற்றும் வலது காலில் 'டிரிப்ஸ்' போடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி குழந்தையின் வலது கையில் மருந்து ஏற்றிய சிறிது நேரத்திலேயே குழந்தையின் கை விரல்கள் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதனால் பதற்றமடைந்த குழந்தையின் தாய் பணியில் இருந்த நர்சிடம் தெரிவித்தபோது, இது ஒன்றும் இல்லை மருந்து நன்றாக தான் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து குழந்தையின் வலது கையின் மூட்டுப்பகுதி வரை கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு நிறத்தில் மாறவும், வலது கையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று மதியம் 2 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தோள்பட்டை வரையில் கை அகற்றப்பட்டது.
தனது மகனின் கை அகற்றப்பட்டதற்கு தவறான சிகிச்சையே காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனால் இந்த சம்பவத்தையடுத்து, மூன்று துறை மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று ராஜிவ் காந்தி மருத்துவமனையில் விசாரணையை மேற்கொண்டனர்.
குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 2 தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.