/indian-express-tamil/media/media_files/LNdTUkbvNFvhJAxf5gqP.jpg)
குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரையில் துளிர் அறம் செய் மையத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.
குழந்தை கடத்தல், குழந்தை பாலியல் வன்கொடுமை, குழந்தைகளை கொண்டு பிச்சை எடுத்தல், குழந்தை கொத்தடிமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரையில் துளிர் அறம் செய் மையத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் பரப்புரை வாகனம் கன்னியாகுமரி வந்த நிலையில் காவல் ஆய்வாளர் சாந்தி வரவேற்றார். அப்போது துளிர் மைய நிறுவனர் வழக்கறிஞர் அஹமத், குழந்தைகள் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான், வழக்கறிஞர் பாலசந்திரன், முனைவர் ராஜ்,
ஆனந்த கூத்தான், ஆசிரியர் சிதம்பரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இந்நிகழ்வில், நிறுவனர் அஹ்மத், “பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று மிகவும் அவசியமானது” என்றார். தொடர்ந்து, “அரசு மருத்துவமனைகள் மட்டுமே அல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் பெண் குழந்தைகளை கடத்தும் கும்பலின் நடமாட்டம் உள்ளது.
இதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் தனியாக ஒரு கண் காணிப்பை குழுவை பணியமர்த்த வேண்டும். இதேபோன்று பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் குழந்தைகள் கண்காணிக்க அரசு தனிக்குழு ஒன்றை அமர்த்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.