scorecardresearch

இன்று முதல் குழந்தைகளுக்கான திரைப்பட திருவிழா: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் என்ன ஸ்பெஷல்?

சுமார் 150 மாணவர்கள் திரைப்பட பயிலரங்கிற்காக சென்னை வந்துள்ளனர்.

இன்று முதல் குழந்தைகளுக்கான திரைப்பட திருவிழா: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் என்ன ஸ்பெஷல்?
அண்ணா நூற்றாண்டு நூலகம் (Express Photo)

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் திரைப்பட விழா இன்று நடைபெறுகிறது, இந்நிகழ்வை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்களை திரையிடம் நிகழ்வுகள் தொடங்கப்பட்டது.

சுமார் 13,000 பள்ளிகளில் இதுபோல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இம்முயற்சி, இன்று (மார்ச் 9ஆம் தேதி) முதல் மார்ச் 11 வரை சென்னையில் திரைப்படப் பட்டறையைத் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “பள்ளிகளில் திரைப்படம் திரையிடல் தொடர்பான பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற ஒரு லட்சம் மாணவர்களில், சுமார் 150 மாணவர்கள் பயிலரங்கிற்காக சென்னை வந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் மாணவர்கள் படைப்பாற்றல் துறையில் பிரபலங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடுவார்கள். இது அவர்களின் திரைப்படங்களின் பார்வையை விரிவுபடுத்த உதவும்.

பயிலரங்கின் நோக்கத்திற்காக, மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு மார்ச் 9 முதல் குறும்படத்தை உருவாக்கும் பணியைத் தொடங்குவார்கள். தொடர்ந்து, பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் திரைப்படங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதிலிருந்து 25 மாணவர்கள் வெளிநாட்டு கல்வி பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அதேபோல், சிறந்த கல்வித் திறன் கொண்ட மாணவர்கள், இலக்கிய விழா, வானவில் மன்றம், விளையாட்டு மற்றும் கலை விழா போன்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் இந்த துறையால் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

எழும்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “மாணவர்கள் இந்த முயற்சியால் மகிழ்ச்சியடைந்து, முன்னேறுவதில் உற்சாகம் அடைந்துள்ளனர்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Childrens film festival at chennai anna centenary library