சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் மேம்பாட்டுப் பணி நடைபெறுவதால் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிறுவர் பூங்கா வளாகத்தில் பாம்புகளின் காட்சிப்படுத்தும் பிரிவுக்கு மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கிண்டி சிறுவர் பூங்காவில், பாம்புகளின் வகைகளை மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இதில், மலைப்பாம்புகள், இந்திய பல்லிகள், முதலைகள், ஆமைகள், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆமைகள் மற்றும் பச்சை உடும்பு, ஸ்லைடர் ஆமை, சியாமிஸ் ஸ்பிட்டிங் கோப்ரா, சுமத்ரா ஸ்பிட்டிங் கோப்ரா, நைல் முதலை மற்றும் குரோக்கடைல் போன்ற வெளிநாட்டு உயிரினங்களின் வகைகளையும் காணலாம்.
கடந்த ஆண்டு, சிறுவர் பூங்காவின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள், முன்னேற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் பிரிவு, செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil